'கியூப்' விளையாட்டில் சாதிக்கும் மாணவன் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

'கியூப்' விளையாட்டில் சாதிக்கும் மாணவன்


வத்திராயிருப்பு:'கியூப்' விளையாட்டில் தனது திறமையால் ஒன்றரை நிமிடங்களில் இலக்கை அடைந்து அபார சாதனை படைக்கிறார் வத்திராயிருப்பை சேர்ந்த பள்ளி மாணவர்.'கியூப்' என்பது ஒருமித்த கலர் வகைகளை ஒரே பக்கமாக சேர்க்கும் ஒரு விளையாட்டு கருவியாகும். அனைத்து கடைகளிலும் விற்பனை செய்யப்படும். சிறுவர்கள் முதல் பலரும் விரும்பி வாங்கி விளையாடுவர். மூளைக்கு மிகவும் வேலைகொடுக்கும் இந்த விளையாட்டு கவனச்சிதறலை கட்டுப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்தும் தன்மைகொண்டது ஆண்ட்ராய்டு போன் வருவதற்கு முன்பு வரை பெரும்பாலானவர்களின் கைகளில் தவழ்ந்தது. தற்போது அந்த இடத்தை ஆண்ட்ராய்டுகள் கைப்பற்றி விட்டன. 




இதை புறந்தள்ளி கியூப் கருவியை கையில் எடுத்துக்கொண்டு அதில் அசாத்திய சாதனை படைத்து வருகிறார் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளி மாணவன் சிவகலுசலிங்கம்.-ஆச்சர்யமான விஷயம்சிறிய கருவியாக இருந்தாலும் அதிக விஷயங்கள் உள்ளன. மனிதனின் மூளைத்திறனை முழுமையாக வெளிக்கொண்டுவரும் இந்த விளையாட்டில் முக்கியமானது 'கான்சென்ட்ரேசன்' (மனஒருமிப்பு).அது இருந்தால் மட்டுமே ஓரளவாவது விளையாட முடியும். அதிலும் ஒன்றரை நிமிடத்தில் இலக்கை அடைவது மிகவும் ஆச்சர்யமான விஷயமாகும் .ராஜசேகரன், தலைமையாசிரியர்-எளிதில் கற்றுக்கொள்ள முடியாதுசிறுவயதுமுதலே இதில் ஈடுபாடு அதிகம் . இதில் சில கணக்கீடுகள் உள்ளன. அதன்படி செயல்பட்டால் சேர்த்து விடலாம்.





ஆனால் கால்குலேசன்களை எளிதில் யாரும் கற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விஷயமாக கற்றுக்கொண்டேன். பல வருட பயிற்சிக்கு பின்தான் இதில் உள்ள சில ஆழ்ந்த விஷயங்கள் எனக்கு புரிந்தது. அதன்படி செயல்பட்டு பார்த்தேன் வெற்றிகிடைத்தது.





அதை தொடர்ந்து செய்து ஒவ்வொரு நிமிடமாக குறைத்துக்கொண்டே வந்தேன். தற்போது ஒன்றரை நிமிடங்களில் சேர்க்க முடிகிறது. இன்னும் குறைப்பதற்கும் , கின்னஸ் சாதனைக்கும் பயிற்சி செய்துவருகிறேன் .- - சிவகலுசலிங்கம், மாணவன்

No comments:

Post a Comment

Please Comment