மேல்நிலைக்கல்வியில், 12 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன,'' என, அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு மாநில அளவில் கலைத்திருவிழா - 2018 போட்டிகள் நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டன. அதற்கான பரிசளிப்பு விழா, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் நடந்தது. கலெக்டர் ஆசியாமரியம் தலைமை வகித்தார். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் திட்ட விளக்க உரையாற்றினார். வெற்றிக்கோப்பை, பங்கேற்பு சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
மேல்நிலைக் கல்வியில் வேளாண்மை, கட்டடக் கலை, டிசைனிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, சுற்றுலாத்துறை உள்பட, 12 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. கலை, பண்பாடு, விளையாட்டு ஆகியவற்றில் மாணவர்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. விளையாட்டு திறமைகளை மேம்படுத்த, ஒன்றியத்திற்கு ஒரு ஸ்டேடியம் கட்ட, மத்திய அரசுடன் பேச்சு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, எம்.பி., சுந்தரம், திருச்செங்கோடு எம்.எல்.ஏ., பொன்சரஸ்வதி, கல்வி நிறுவன சேர்மன் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
Please Comment