தமிழக பள்ளி கல்வியில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களில் முக்கியமானதாக, பொது தேர்வுகளுக்கான, &'ரேங்கிங்&' முறை ரத்து செய்யப்பட்டது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த மாணவர்களில், மாநில மற்றும் மாவட்ட அளவில், மூன்று முன்னிலை இடம் பெற்றவர்களுக்கு, அரசின் உதவி தொகை வழங்கப்பட்டு வந்தது. பெரும்பாலும் ஆங்கில வழி மாணவர்களுக்கே, இந்த உதவி தொகை கிடைத்தது.
இதனால், அரசு பள்ளி மாணவர்களும், தமிழ் வழி மாணவர்களும் உற்சாகம் இழந்தனர். மேலும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆர்வமும், படிப்பின் மீது குறைந்தது.இதை மாற்றும் வகையில், புதிய திட்டத்தை, தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதன்படி, தமிழ் வழியில் படித்து, நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, ஊக்க தொகை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.இந்த உத்தரவின்படி, 2017 - 18ம் கல்வி ஆண்டில், தமிழ் வழியில் படித்து, முன்னிலை இடம் பெற்ற திறமையான மாணவர்களுக்கு, காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், தலா, 15 மாண வர்கள் என, ஒவ்வொரு மாவட்டத்திலும், 30 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு, காமராஜர் பெயரில் விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
மேலும், பத்தாம் வகுப்பில் முன்னிலை மதிப்பெண் பெற்ற, தமிழ் வழி மாணவர்களுக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாயும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, தலா, 20 ஆயிரம் ரூபாயும் உதவி தொகையாக வழங்கப்படுகிறது. வரும், 5ம் தேதி சென்னையில் நடக்கும் ஆசிரியர் தின விழாவில், இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.
No comments:
Post a Comment
Please Comment