போதிய உடற்பயிற்சி இல்லாததால் 140 கோடி மக்களுக்கு நோய் அபாயம் - உலக சுகாதார நிறுவனம் தகவல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

போதிய உடற்பயிற்சி இல்லாததால் 140 கோடி மக்களுக்கு நோய் அபாயம் - உலக சுகாதார நிறுவனம் தகவல்

உலகம் முழுவதும் போதுமான உடற்பயிற்சி செய்யாததால் 140 கோடி  மக்கள் கடும் நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது உலக சுகாதார அமைப்பு கடந்த 2016ம் ஆண்டு 168 நாடுகளில் தனிமனித நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அவர்களது பணி இடம், வீடு ஆகியவற்றில் அவர்களின் செயல்பாடுகள் குறித்து கண்காணிக்கப்பட்டது. சுமார் 19 லட்சம் பேர் இந்த ஆய்வின் கீழ் கொண்டு வரப்பட்டனர்.  உலக சுகாதார நிறுவனத்தின் இந்த ஆய்வு முடிவு லான்செட் குளோபல் ஹெல்த் என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. 








இந்த ஆய்வு அறிக்கை கூறியிருப்பதாவது: உலக அளவில் மக்களின் உடற்பயிற்சி அளவில் எந்தவித குறிப்பிடத்தகுந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதன் காரணமாக அவர்களுக்கு இருதய நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் சாத்தியம் அதிகமாக உள்ளது.   உலகம் முழுவதும் போதுமான உடற்பயிற்சி செய்யாததால் 140 கோடி மக்கள் கடும் நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Please Comment