தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 8, 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதலாம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் கூறுகையில்
மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாமலேயே நேரடியாக 8, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வில் பங்கேற்கலாம் என்று தெரிவித்தார்.
மேலும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடக்கும் தனித்தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் பொதுதேர்வு மற்றும் ஜூன், ஜூலையில் உடனடித் தேர்வுகள் வழக்கம் போல் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
Please Comment