சிறுபான்மையின மாணவிகள் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சிறுபான்மையின மாணவிகள் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவிகள் அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். 



இதுகுறித்து கலெக்டர் நிர்மல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிறுபான்மையின சமூகத்தை சார்ந்த மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கி பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் கல்வி தொடர்ந்து பயில முடியாத மாணவிகளை அங்கீகரித்து, ஊக்குவிக்கும் வகையில் பேகம் ஹஸரத் மாஹல் நேஷனல் ஸ்காலர்ஷிப் என்ற திட்டம் மூலம் அரசின் சார்பில் கல்வி உதவி (மவுலானா ஆசாத் கல்வி ஸ்காலர்ஷிப்) வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சிறுபான்மையினராக கருதப்படும் முஸ்லிம், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜைனர்கள் மற்றும் பார்சிஸ் ஆகிய சிறுபான்மை சமூகத்தில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் விண்ணப்பிக்கலாம். 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை பயில்பவர்கள் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களும் மற்றும் 12ம் வகுப்பு பயில்பவர்கள் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களும் அல்லது அதற்கு இணையான கிரேடு மதிப்பெண்கள் முந்தைய வகுப்புகளில் பெற்றிக்க வேண்டும். கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவிகளின் பெற்றோர் அல்லது காப்பாளரின் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை வருடத்திற்கு ரூ.10 ஆயிரமும், 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பிற்கு வருடத்திற்கு ரூ.12 ஆயிரமும் இரண்டு தவணைகளாக மாணவிகளின் வங்கிக் கணக்கில் வழங்கப்படும். இந்த கல்வி உதவித் தொகையில் சேர்க்கை, கற்பிக்கும் கட்டணம், புத்தகங்கள், எழுதுபொருள் மற்றும் உறைவிடம் ஆகிய செலவினங்கள் அடங்கும். 





எனவே மாணவிகள் www.maef.nic.in என்ற இணையதள முகவரியில் வரும் 15ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அனைத்து சான்றுகளுடன் பள்ளி தலைமையாசிரியர் அல்லது முதல்வர் கையொப்பத்துடன் அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை, மவுலானா ஆசாத் வளாகம், செல்ம்ஸ் போர்டு சாலை, புதுடில்லி-110055 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்துடன் பள்ளி முதல்வர் அல்லது தலைமை ஆசிரியரால் சான்றளிக்கப்பட்ட மாணவர் புகைப்படம் மற்றும் சரிபார்க்கப்பட்ட படிவத்தில் சான்றொப்பம் பெற்றிருத்தல் வேண்டும். சுய சான்றொப்பத்துடன் கூடிய முந்தைய வகுப்பின் மதிப்பெண் மற்றும் ஆண்டு வருமானச் சான்றிதழ், சிறுபான்மையினம் என்பதற்கான சுய உறுதிமொழி படிவம், வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி, எம்.ஐ.சி.ஆர் ஆகிய விவரங்கள் அடங்கிய வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றையும் இணைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Please Comment