சென்னை: 'டிஸ்லெக்சியா' என்னும் குறிப்பிட்ட கற்றல் குறைபாடு உள்ள சிறப்பு குழந்தைகளை கையாளும் வகையில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி சென்னையில் நேற்று தொடங்கியது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 கோடியே 30 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அவர்களில் சில குறிப்பிட்ட மாணவ, மாணவியர் எழுதுவதில், பேசுவதில், குறைபாடு உடையவர்களாக உள்ளனர். அவர்களை எப்படி கையாள்வது என்று தெரியாமல் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் நிலை உள்ளது.
குறிப்பிட்ட கற்றல் குறைபாடு உள்ள மேற்கண்ட குழந்தைகளை ைகயாள்வது குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி, பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மதராஸ் டிஸ்லெக்சியா சங்கம் ஆகியவை இணைந்து பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கின்றன.
இதற்கான தொடக்க விழா சென்னை எழும்பூரில் உள்ள மாகாண பெண்கள் மேனிலைப் பள்ளியில் நேற்று தொடங்கியது. பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அறிவொளி, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, மதராஸ் டிஸ்லெக்சியா சங்கத்தின் தலைவர் சந்திரசேகர், விழிப்புணர்வு துறைத் தலைவர் ஹரிணிமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சியை தொடங்கி வைத்து, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரில் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளை ஆசிரியர்கள் எப்படி கையாள்வது என்ற திறனை ஆசிரியர்கள் பெறுவார்கள். சென்னை மாவட்டத்தில் 5 நாட்கள் இந்த பயிற்சி நடக்கிறது. அதில் 40 ஆசிரியர்கள் பயிற்சி பெற்று, பிறகு அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிப்பார்கள். அதேபோல, மற்ற மாவட்டங்களிலும் இந்த பயிற்சி நடக்கிறது. இதன் மூலம் முதற்கட்டமாக 1500 ஆசிரியர்கள் பயிற்சி பெற்று தமிழகம் முழுவதும் உள்ள வட்டாரங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.

No comments:
Post a Comment
Please Comment