கரூரில் அடுத்த மாதம் தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாடு ஆசிரியர்களுக்கு வழிகாட்டி பயிற்சி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கரூரில் அடுத்த மாதம் தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாடு ஆசிரியர்களுக்கு வழிகாட்டி பயிற்சி


கரூரில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாடு குறித்து ஆசிரியர்களுக்கு வழிகாட்டி பயிற்சி நடைபெற்றது.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்டக்குழு சார்பில் தேசிய அறிவியல் குழந்தைகள் மாவட்ட மாநாடு அடுத்த மாதம்(அக்டோபர்) கரூரில் நடைபெற உள்ளது. மாநாட்டில் பங்கேற்கும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபற்றது. மாவட்ட செயலாளர் ஜான்பாட்சா தலைமை வகித்தார். 




மாநில செயலாளர்கள் பாலகிருஷ்ணன், தியாகராஜன் சிறப்புரையாற்றினர். மாவட்ட துணைத்தலைவர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் ஆரோக்கிய பிரேம்குமார், சண்முகவடிவு, தனபால், திலகவதி ஆகியோர் ஆய்வு குறித்து செய்முறை பயிற்சி அளித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.



ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியருடன் 5 மாணவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு அதனை சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட மாநில மாநாட்டில் சிறந்த ஆய்வுகளை தேர்வு செய்து இளம் விஞ்ஞானி என்ற சான்றிதழ் வழங்கப்படும். மாநாட்டில் சமர்ப்பிப்பதற்காக இதுவரை 300 ஆய்வுகளை பதிவு செய்துள்ளனர். 

No comments:

Post a Comment

Please Comment