வருகை பதிவேட்டில் தமிழில்தான் கையெழுத்திட வேண்டும் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வருகை பதிவேட்டில் தமிழில்தான் கையெழுத்திட வேண்டும்


அரசு அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் வருகை பதிவேட்டில் தமிழில்தான் கையொப்பமிட வேண்டும் என பெரம்பலூரில் தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி கூறினார்.






பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் 2 நாட்கள் நடைபெற்றது. நிறைவுநாள் நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி கலந்து கொண்டு பேசியதாவது: தமிழ் இனிமையான மொழி, தொன்மையான மொழி, சிறந்தமொழி. இந்தமொழி நம்முடைய தாய்மொழி. இந்த சிறப்புமிக்க தமிழ் மொழி தான் தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகவும் இருக்கின்றது. அரசுஅலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் வருகை பதிவேட்டில் தமிழில்தான் கையொப்பமிட வேண்டும். நமது அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டுவரும் கோப்புகளை தாய்மொழியான தமிழ் மொழியில் எழுதுகிறபோதுதான் சொல்ல வருகின்ற பொருண்மையை சரியாக பிறருக்கு உணர்த்த முடியும். எனவே அலுவலக பயன்பாட்டில் விதிவிலக்கு பெற்ற இனங்களைத் தவிர்த்து முழுமையாக தமிழில் எழுத வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Please Comment