எஸ்.பி.ஐ.,யின், 'யோனோ' செயலி; ஒரு கோடி முறை பதிவிறக்கம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

எஸ்.பி.ஐ.,யின், 'யோனோ' செயலி; ஒரு கோடி முறை பதிவிறக்கம்

எஸ்.பி.ஐ., எனும், பாரத ஸ்டேட் வங்கியின், 'யோனோ' செயலி, அறிமுகப்படுத்தப்பட்ட, 10 மாதங்களில், ஒரு கோடிக்கும் மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளது.இது குறித்து, எஸ்.பி.ஐ., வெளியிட்ட செய்திக்குறிப்பு: எஸ்.பி.ஐ.,யின் ஒருங் கிணைந்த டிஜிட்டல் சேவை தளமான, 'யோனோ' செயலியை, ஒரு கோடிக்கும் மேல், வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்து உள்ளனர். 









இந்த ஒரு செயலியை வங்கி, ஷாப்பிங் முதலீட்டு தேவை என, பல்வேறு தேவைகளுக்கு, வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும். 'கூகுள் பிளே ஸ்டாரின்' முதல் ஐந்து நிதித்துறை சார்ந்த செயலியில், எஸ்.பி.ஐ.,யின் யோனோ செயலியும் ஒன்று.யோனோ செயலி அறிமுகப்படுத்தப்பட்டது முதல், 25 புதிய இ - வர்த்தகர்கள் இதில் கூடுதலாக இணைக்கப்பட்டு உள்ளனர். சமீபத்தில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



PLEASE CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

Please Comment