பள்ளி கல்வியில் நிகழ்ந்த அதிரடி மாற்றம் : ஒட்டுமொத்த மாணவர்களின் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் செங்கோட்டையன்.! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பள்ளி கல்வியில் நிகழ்ந்த அதிரடி மாற்றம் : ஒட்டுமொத்த மாணவர்களின் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் செங்கோட்டையன்.!


பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பிற்கு செல்லும் போது பல மாணவர்கள் அடிப்படை தெரியாமல் திணறுவதாக கடந்த சில ஆண்டுகளாக விமர்சனம் எழுந்து வந்தது.



இதனை தீவிரமாக ஆராய்ந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை, பெரும்பாலான தனியார் பள்ளிகள் 11 ஆம் வகுப்பு பாடங்களை நடத்தாமல் நேரடியாக இரண்டு வருடம் 12 வகுப்பு பாடங்களையே நடத்தி வந்துள்ளனர்.


பொறியியல் மற்றும் மருத்துவத்திற்கான அடிப்படையே 11 ஆம் வகுப்பு பாடத்தில் தான் இருக்கும் நிலையில், அதனை படிக்காமல் செல்லும் மாணவர்கள் கல்லூரியில் படிப்பை தொடர சிரமப்படுவதாக தெரியவந்தது.


இதனை தொடர்ந்து தமிழக பள்ளிக்கல்வித்துறை எடுத்த முயற்சியின் விளைவாக 11ஆம் வகுப்பிற்கும் பொதுத் தேர்வு முறை கொண்டுவரப்பட்டது.



இதனால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக புகார் வந்தது. இதனை தொடர்ந்து அறிவிப்பை வெளியிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், வரும் 2019ஆம் ஆண்டு முதல் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.


உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்களின் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் மட்டுமே இனி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.


11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்ணுக்கு தலா 600 மதிப்பெண் வீதம் தனித்தனியே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
பத்தாம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடினமாக இருப்பதாக மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.



மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.


எனவே, 11 ஆம் வகுப்புக்கு தேர்வுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். ஆனால், தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது' எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Please Comment