அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளதாக கடலூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் ச.சிவப்பிரகாசம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய அஞ்சல் துறை சார்பில் அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டத்துக்கு நேரடியாக முகவர்கள் நியமனத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை, "அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர், கடலூர் கோட்டம், கடலூர்-1' என்ற முகவரிக்கு வருகிற 7-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் வசிக்கும் பகுதியின் மக்கள் தொகை 5 ஆயிரத்துக்கு உள்பட்டிருந்தால் 10-ஆம் வகுப்பு தேர்ச்சியும், 5 ஆயிரத்துக்கு மேற்பட்டிருந்தால் பிளஸ்-2 தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
ஆயுள் காப்பீடு பற்றிய விவரங்கள், கணினியில் வேலை செய்யும் திறன், தங்களது வசிப்பிடம் தொடர்பான விவரங்களை தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களின் சுய குறிப்புடன், கல்வித் தகுதி, இருப்பிடச் சான்று, ஆதார் எண் ஆகியவற்றுக்கான அசல், நகல் சான்றுகளுடன் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும். தேர்வு செய்யப்படுவோர் உரிமக் கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Please Comment