நடப்பு ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் வெளிநாடு சென்று மருத்துவம் பயில மத்திய அரசு அனுமதி
நடப்பு கல்வியாண்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் வெளிநாடு சென்று மருத்துவம் பயில மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக இயற்பியல், வேதியியல், உயிரியலில் 50 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் எடுத்தவர்கள் வெளிநாடு சென்று மருத்துவம் பயிலத் தகுதியுடையவர் என இந்திய மருத்துவக் கவுன்சில் சான்று வழங்கும். ஆனால், கடந்த மார்ச் 8-ம் தேதி இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பில், வெளிநாடு சென்று மருத்துவம் பயில்வதற்கான தகுதியாக நீட் தேர்ச்சி கருதப்படும் எனத் தெரிவித்திருந்தது.
ஆனால் நடப்பு ஆண்டு மட்டும் நீட் தேர்வு எழுதாத மாணவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியியலில் 50 விழுக்காடு மதிப்பெண் பெற்று இருந்தால் வெளிநாடு சென்று மருத்துவம் படிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
அதே சமயம் நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தால் அவர்கள் வெளிநாடு சென்று மருத்துவர் படிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
No comments:
Post a Comment
Please Comment