செவிலியர் பட்டயப் படிப்பு சேர்க்கை: செப்.18-இல் சான்றிதழ் சரிபார்ப்பு
செவிலியர் மற்றும் பேறுகால மருத்துவப் பணியாளர் பட்டயப் படிப்புக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செப்.18-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கர்நாடகத்தில் உள்ள மாநில அரசு மற்றும் தன்னாட்சி உரிமம் பெற்ற மருத்துவக் கல்வியகங்களில் செவிலியர் மற்றும் பேறுகால மருத்துவப் பட்டயப் படிப்பில் சேர்ந்து படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தன. இதற்கு பெரும்பாலானோர் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
சேர்க்கைக்கு ஏற்கப்பட்ட விண்ணப்பங்கள் கர்நாடக தேர்வு ஆணையத்தின் www.kea.kar.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment