2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடத் தடை தமிழக பாடத்திட்டத்துக்கும் பொருந்தும்: நீதிபதி கிருபாகரன்
2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என்ற உத்தரவு சிபிஎஸ்இ உடன் தமிழக பாடத்திட்டத்துக்கும் பொருந்தும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
2-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கூடாது என்ற என்.சி.இ.ஆர்.டியின் விதிகளை பின்பற்ற சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, வழக்கறிஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்த மனுவில், சிபிஎஸ்இ பாடத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து மத்திய அரசு, சிபிஎஸ்சி மற்றும் என்சிஇஆர்டியும் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
No comments:
Post a Comment
Please Comment