'பிளெக்சி பேர்' திட்டத்தில் 40 ரயில்களுக்கு விலக்கு
புதுடில்லி: 'பிரீமியம்' ரயில்களில், 'பிளெக்சி பேர்' எனப்படும் மாறுதலுக்குரிய கட்டண திட்டத்தில் இருந்து, 40 ரயில்களுக்கு விலக்கு அளிக்க, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.ரயில் பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவில் சாதாரண முன்பதிவு திட்டத்தை தவிர, 'தட்கல், பிரீமியம்' மற்றும் பிளக்சி பே' எனப்படும், மாறுதலுக்குரிய கட்டண திட்டம் உட்பட, பல்வேறு முன்பதிவு திட்டங்கள் உள்ளன.
முக்கியமான வழித் தடங்களில் இயக்கப்படும், சதாப்தி, துாரந்தோ, ராஜ்தானி போன்ற பிரீமியம் ரயில்களில், டிக்கெட் முன்பதிவுக்கு, 'பிளெக்சி பேர்' கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இந்த பிளெக்சி பேர் திட்டத்தில், நாடு முழுவதும், 142 ரயில்கள் இயக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment
Please Comment