Tour - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Tour

மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல கட்டுப்பாடுகள்



திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து மாணவர், மாணவிகளை சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஆட்சியர் கு. ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.
இமாசல பிரதேசம், குலுமணாலி பகுதிக்கு அண்மையில் சுற்றுலா சென்ற திருச்சி காட்டூர் தனியார் பள்ளி மாணவர்கள் 32 பேர் மழை, வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர். இருப்பினும் அவர்கள் பத்திரமாக சொந்த ஊர் திரும்பினர். இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் பள்ளிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.




இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி கூறியது:
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளில் இருந்து கல்விச் சுற்றுலா செல்வதற்கு முன் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் ஒரு மாதத்துக்கு முன்பே உரிய முன் அனுமதி பெற வேண்டும்.

No comments:

Post a Comment

Please Comment