ஜியோ: தீபாவளி சிறப்பு "100% கேஷ் பேக்" சலுகை.! மிஸ் பண்ணிடாதீங்க.! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஜியோ: தீபாவளி சிறப்பு "100% கேஷ் பேக்" சலுகை.! மிஸ் பண்ணிடாதீங்க.!


பாவளி சிறப்பு கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்தியாவில் அனைத்து இடங்களிலும் சலுகை மழை பொலிந்து வருகின்றது.Reliance Jio Diwali Offer 2018 100 cashback on recharges above Rs 149 .



தீபாவளி சிறப்பு கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்தியாவில் அனைத்து இடங்களிலும் சலுகை மழை பொலிந்து வருகின்றது.

இந்தியாவில் உள்ள அனைத்து ஆன்லைன் விற்பனையாளர்கள், ஸ்மார்ட் போன் பிராண்ட் மற்றும் டெலிகாம் நிறுவனங்கள் என அனைவரும் அவர்களின் பயனர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றனர்.

ரிலையன்ஸ் ஜியோ


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய தீபாவளி சலுகை திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த வருடத் தீபாவளி கொண்டாட்டத்தைச் சிறப்பிக்கும் வகையில் ஜியோ நிறுவனம் நம்ப முடியாத பல கேஷ் பேக் சலுகைகளை வழங்கியுள்ளது.
புதிய திட்டம்




அதுமட்டுமில்லாமல், ஜியோ நிறுவனம் ரூ.1,699 திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பயனருக்கு 547.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் தினம் 100 இலவச எஸ்.எம்.எஸ் என 365 நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
100% கேஷ் பேக்



இந்த புதிய ரூ.1,699 திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்கு நிச்சயம் 100% கேஷ் பேக் கூப்பன்கள் வழங்கப்படுமென்று ஜியோ நிறுவனம் உறுதியளித்துள்ளது. பயனருக்கு மூன்று ரூ.500 க்கான வவுச்சர் மற்றும் ஒரு ரூ.200 க்கான வவுச்சர் வழங்கப்படும்.
ரூ.149 திட்டம் முதல் ரூ.9,999 திட்டம் வரை


அதுமட்டுமில்லாமல் ஜியோவின் ரூ.149 திட்டத்தில் துவங்கி ரூ.9,999 திட்டம் வரை உள்ள அனைத்து திட்டத்திற்கும் கேஷ் பேக் சலுகை வழங்கப்படுமென்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Please Comment