இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் கடலில் இருக்கும் அனைததையும் ஆராய முடியும். அதன்படி கடற்படுகையை ஆராயும் கேமராவைப் பயன்படுத்தி உலகின் மிகப் பழமையான கப்பல் சிதைவு, அட்லாண்டிக் பெருங்கடலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஐரோப்பா, காகசஸ் மற்றும் மேற்கு ஆசியாவிற்கும் இடையே இருக்கும் அட்லாண்டிக் பெருங்கடலின் நீர் மற்றும் குறுகலான கடல் பகுதியில் இருக்கும் பகுதி கருங்கடல் எனப்படுகிறது. இந்த கருங்கடலில் சுமார் 2கிமி ஆழத்தில் தான் அந்த பழமையான கப்பல் சிதைவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Please click here to download >5th Standard Learning Outcomes (pdf)
Please click here to download >5th Standard Learning Outcomes (pdf)
கேமரா:
குறிப்பாக எண்ணெய், எரிவாயு இருப்பிடித்தைக் கண்டுபிடிப்பதற்காகக் கடற்படுக்கையை ஆராயும் சிறப்பு கேமரா தான் இதை கண்டுபிடித்துள்ளது. மேலும் உடைந்த 60கப்பல்களை தேடும் பணி கருங்கடலில் நடைபெற்று வருகிறது.
கரிமக் காலச் சோதனை
ஆய்வாளர்கள் இந்த கப்பலின் ஒரு பகுதியைக் கரிமக் காலச் சோதனைக்கு உட்படத்தியதில், அது உலகின் மிகப் பழைய கப்பல் என்பது தெரியவந்துள்ளது. பின்பு பக்கவாட்டில் சரிந்தவாறு உள்ள இந்த கப்பலின் பாய்மரமும்(Mast) சுக்கானும்கூட(Rudder) இப்போது கூட பாழடையாமல் அப்படியே உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்கிப் போகவில்லை
மேலும் கடலின் 2கிமி ஆழத்தில்,கடலில் ஆக்ஸிஜன் இருக்காது என்பதால் மரத்தால் ஆன கப்பல் மட்கிப் போகவில்லை எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கப்பல் கட்டுமானம்
பின்பு பழங்காலத்தில் கப்பல் கட்டுமானம் எப்படி இருந்தது என்றும், கப்பல் பயணம் எப்படி இருந்தது போன்ற விபரங்களை புரிந்துகொள்ள, இந்த கண்டுபடிப்புகள் மிகவும் உதவியாக இருக்கும் என ஆயவாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment
Please Comment