பெண் குழந்தை விருது பெற நவம்பர் 16க்குள் விண்ணப்பிக்கலாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பெண் குழந்தை விருது பெற நவம்பர் 16க்குள் விண்ணப்பிக்கலாம்


திருப்பூரில், பெண் குழந்தை விருது பெறுவதற்கு நவம்பர் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.






இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை: 




தேசியப் பெண் குழந்தைகள் தின விழாவின்போது தமிழக அரசால் 2017ஆம் ஆண்டுக்குப் பெண் குழந்தைகளுக்குப் பாராட்டுப் பத்திரம் மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கு பெண் கல்வி, பெண் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, குழந்தைத் திருமணத்தைத் தடுத்தல், தற்காப்புக் கலையில் மாநில அளவிலான சான்றுகள் பெற்றிருத்தல், விளையாட்டில் மாநில அளவில் முதன்மை பெற்றிருத்தல், சமூக அவலங்கள் மற்றும் அவை தீர்வு காண்பதற்குப் புத்தகங்கள் மற்றும் கையேடுகள் எழுதி வெளியிட்டிருத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்.






மேலும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக 5 முதல் 18 வயதுக்கு உள்பட்டவர்களாக இருக்க வேண்டும். பெயர், முகவரி, புகைப்படம், ஆதார் எண், சாதனைகளின் சான்றுகள் ஆகியவற்றின் ஒரு பக்கத்துக்கு மிகாத ஆதாரங்களுடன், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர், மாவட்ட விளையாட்டு அலுவலர், காவல் துறையினர் மற்றும் குழந்தைகள் நலனுக்காக சேவைபுரியும் தொண்டு நிறுவனம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் முன்மொழிவுடனான விண்ணப்பத்தை நவம்பர் 16ஆம் தேதிக்குள் திருப்பூர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment