'ஸ்பார்க் 2018'எனும், பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் தனித்திறனை வெளிப்படுத்தும் போட்டி, ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி அரங்கில் நடந்தது.
கல்லுாரி முதல்வர் சுதாமோகன்ராம் துவக்கி வைத்தார்.விளையாட்டு, ஓவியம், வினாடி வினா, காய்களில் சிற்பம், பேச்சுபோட்டி, குரலிசை, கணினி விளையாட்டு, யூத் பார்லிமென்ட் உள்ளிட்ட, பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. திரைப்பட பின்னணி பாடகி ஸ்ரீலேகா பார்த்தசாரதி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த, 48 பள்ளிகளிலிருந்து, 1,500 மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மாணவர்களுக்கு மட்டுமின்றி சிறந்த பள்ளிகளுக்கான விருதும், கோவை மற்றும் திருப்பூர் மண்டலங்களுக்கு வழங்கப்பட்டது. கல்லுாரி இயக்குனர் ராஜாராம், ஐ.டி., துறை இயக்குனர் கண்ணன் நரசிம்மன், கல்லுாரி வேலைவாய்ப்பு துறை இயக்குனர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
Please Comment