பிளஸ்2 துணைத்தேர்வு: ஆன்லைனில் ரிசல்ட் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பிளஸ்2 துணைத்தேர்வு: ஆன்லைனில் ரிசல்ட்

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ்2 துணைத்தேர்வு முடிவை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாக இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,' என கல்வி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.





பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ்2 துணைத்தேர்வு கடந்த, செப்., மற்றும் அக்., மாதங்களில் நடைபெற்றன. தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) தேர்வு முடிவை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாக, இன்று, 31ம் தேதி முதல், www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பதிவெண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 'பிரின்ட்' எடுத்துக் கொள்ளலாம்.விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், முதன்மை கல்வி அலுவலகத்துக்கு நேரில் சென்று, நாளை, 1ம் தேதி மற்றும், 2ம் தேதி வரை உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.விடைத்தாள் நகல் பெற மொழி பாடத்துக்கு, 550 ரூபாய் (இரண்டு தாள்களுக்கும்), மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும், 275 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.மறு கூட்டலுக்கு, பகுதி 1 மொழி, பகுதி 2 மொழி மற்றும் உயிரியல் (ஒவ்வொன்றுக்கும்), 305 ரூபாய்; மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும், 205 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.இத்தகவலை, கல்வி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Please Comment