5ம்தேதி அரசு விடுமுறை அறிவிப்பால் சென்னை பல்கலை தேர்வு 7ம் தேதி நடக்கும் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

5ம்தேதி அரசு விடுமுறை அறிவிப்பால் சென்னை பல்கலை தேர்வு 7ம் தேதி நடக்கும்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 5ம் தேதியும் அரசு விடுமுறை அறிவித்துள்ளதை அடுத்து, சென்னைப் பல்கலைக்கழக தேர்வுகள் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள், அலுவலகங்களுக்கு நவம்பர் 5ம் தேதி விடுமுறை தினமாக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து நவம்பர் 5ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 




மேலும், நவம்பர் 5ம் தேதிக்கு பதிலாக நவம்பர் 10ம் தேதி பள்ளிகள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்லூரிகளுக்கும் மேற்கண்ட அரசு அறிவிப்பு பொருந்தும் என்பதால் 5ம் தேதி அனைத்து கல்லூரிகளும் இயங்காது. அதனால் அந்த நாளில் சென்னைப் பல்கலைக் கழகம் சார்பில் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளும் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன

No comments:

Post a Comment

Please Comment