தேசிய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் சார்பில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில், யோகாவில் தங்கம், வெள்ளி வென்ற, காஞ்சிபுரம் மாணவர்களுக்கு, தமிழக முதல்வர், பழனிசாமி, 3.5 லட்ச ரூபாய் வழங்கினார்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், கடந்த ஆண்டு, சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த, தேசிய பள்ளிகள் விளையாட்டுக் குழும விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற்றனர்.இதில், யோகாவில், விக்டோரியா பள்ளி மாணவர், கிஷோர்குமார்; செவிலிமேடு, விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி, தேஜஸ்வினி பங்கு பெற்றனர்.போட்டியில், கிஷோர்குமார் தங்கம் வென்றார். அவருக்கு, இரண்டு லட்சம் ரூபாயும், வெள்ளி வென்ற தேஜஸ்வினிக்கு, 1.5 லட்ச ரூபாயும், முதல்வர் பழனிசாமி வழங்கினார்.இருவரையும், யோகா ஆசிரியர், யுவராஜ் பாராட்டினார்.

No comments:
Post a Comment
Please Comment