தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்ஷிரேஸ்தா கூறியதாவது:
தீபாவளி பண்டிகையை முன் னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு மொத்தம் 50 சிறப்பு ரயில்கள் இயக்கப் படவுள்ளன. இதுவரையில் 42 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட் டுள்ளன. மேலும், 4 முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் உட்பட கூடுதலாக 8 சிறப்பு ரயில்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, ரயில் பயணிகள் ஒருங்கிணைந்த சேவை பெறும் வகையில் ரயில் பாட்னர் (RAIL PARTNER) என்ற செயலியை பொதுமேலாளர் குல்ஷிரேஸ்தா தொடங்கிவைத்தார்.
இது தொடர்பாக தெற்கு ரயில்வேயின் முதன்மை வணிக மேலாளர் பிரியம்வதா விஸ்வநாதன் கூறும்போது, ‘‘ரயில் பயணிகள் ஒருங்கிணைந்த சேவையை பெறும் வகையில் இந்த புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு வசதிகளை இந்த செயலி மூலம் பெறலாம். இந்த செயலியில் ரயில் டிக்கெட்கள் முன்பதிவு செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம்’’என்றார்.
இந்த சந்திப்பின்போது தெற்கு ரயில்வே தலைமை மேலாளர் (இயக்கம்) எஸ்.அனந்தராமன், சென்னை கோட்ட மேலாளர் நவீன்குலாத்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
Please Comment