சிறப்பாசிரியர் பணிகளுக்கான இறுதி தேர்வு பட்டியல் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சிறப்பாசிரியர் பணிகளுக்கான இறுதி தேர்வு பட்டியல் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிகளுக்கான இறுதி தேர்வுபட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் நேற்று இரவு வெளியிட்டது.




அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 1325 சிறப்பாசிரியர் பணியிடங்களை (தையல், ஓவியம், உடற்கல்வி, இசை) நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இத்தேர்வினை 35,781 பேர் எழுதினர். தேர்வெழுதிய அனைவரின் மதிப்பெண்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியிடப்பட்டன. "ஒரு காலியிடத்துக்கு 2 பேர்" என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றி தழ் சரிபார்ப்புக்கு 2,865 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்டு 13-ம் தேதி அனைத்து மாவட் டங்களிலும் அந்தந்த முதன்மை கல்வி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றன. 



சான்றிதழ் சரிபார்ப்பின் போது தேர்வர்களின் கல்வித்தகுதி சான் றிதழ், சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவை சரிபார்க்கப்பட்டதோடு பதிவுமூப்புக்கு பதிவு காலத்துக்கு ஏற்ப உரிய மதிப் பெண்கள் (அதிகபட்சம் 5) வழங்கப் பட்டன. பின்னர் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உயர் அதிகாரிகளின் நேரடி பார்வையில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.


இறுதி தேர்வு பட்டியல் வெளியீடு


சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்து 2 மாதங்கள் நெருங்கிவிட்ட நிலையில், இறுதி தேர்வுபட்டியல் எப்போது வெளியிடப்படும் என்று தேர்வர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வந்த னர். இந்த நிலையில், சிறப்பாசிரியர் பணிகளுக்கான இறுதி தேர்வுபட்டி யலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இரவு வெளியிட்டது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:


கடந்த 2012-2016-ம் ஆண்டுக்கான சிறப்பாசிரியர் பதவிகளில் 1,325 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒரு காலியிடத்துக்கு 2 பேர் என்ற விகிதாச்சாரத்தில் தகுதியுள்ள தேர்வர் கள் ஆகஸ்ட் 13-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். அதில் கலந்துகொண்டவர்களின் சான்றி தழ்கள் சரிபார்க்கப்பட்டு தற்காலிக தேர்வுபட்டியல் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு பெற்றவர்களின் பட்டியல் சம்பந்தப்பட்ட பயன்பாட்டு துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். பணிநியமன ஆணை அத்துறைகள் மூலம் வழங்கப் படும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இதுவரை சிறப் பாசிரியர் நியமனம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது முதல்முறையாக போட்டித் தேர்வு மூலமாக பணிநியமனம் நடைபெறுகிறது என்பது குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Please Comment