18 வயது நிறைவடைந்த கல் லூரி மாணவர்களின் பெயர் களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக 100 மாணவர் களை தேர்தல் ஆணைய தூதுவர்களாக சென்னை மாநகராட்சி நியமித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. 18 வயது நிறைந்த அனைவரின் பெயர்களும் வாக் காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்ற நோக்கில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 18 வயது நிறைவடைந்த கல்லூரி மாணவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப் பதற்காக, ஒவ்வொரு கல்லூரி யிலும் ஒரு தேர்தல் ஆணைய தூதுவரை சென்னை மாநக ராட்சி நியமித்துள்ளது. அவ் வாறு 100 மாணவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விழிப்புணர்வு பணிகளில்
இவர்கள், அந்தந்த கல்லூரி களில் 18 வயது நிறை வடைந்த மாணவர்களை கண் டறிந்து, அவர்களின் பெயர் கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்வது, பட்டியலில் பெயர் இல்லாத மாணவர்களிடம் உரிய விண்ணப்பப் படிவங் களை வழங்கி, அவற்றை பூர்த்தி செய்து பெற்று, மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்குவார்கள். இப் பணியை இவர்கள் அடுத்த மக்களவை தேர்தல் வரை மேற்கொள்வார்கள். தேர்த லின்போது, அவர்கள் வாக் காளர் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுத்தப்படு வார்கள்.
இவர்களுக்கான பயிற்சி முகாம், ரிப்பன் மாளிகை வளா கத்தில் நேற்று நடைபெற்றது. அதில் மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) ஆர்.லலிதா பங்கேற்று, 18 வயது நிறைவடைந்த மாணவர்களின் பெயர்களை எவ்வாறு, வாக்காளர் பட்டியலில் சேர்க்க உதவுவது என்பது குறித்து தேர்தல் ஆணைய தூதுவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
No comments:
Post a Comment
Please Comment