மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக புதிய எல்எச்பி பெட்டிகள் ஐசிஎப் நிறுவனத்தில் தயாரிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக புதிய எல்எச்பி பெட்டிகள் ஐசிஎப் நிறுவனத்தில் தயாரிப்பு

மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்ய வசதியாக புதிய எல்எச்பி ரயில் பெட்டிகளை ஐசிஎப் நிறு வனம் தயாரித்துள்ளது.


இதுதொடர்பாக ஐசிஎப் அதிகாரிகள் கூறியதாவது:


‘‘சாதாரண ரயில் பெட்டி களுக்கு கீழ் பேட்டரி மற்றும் ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட் டிருக்கும். ஆனால் எல்எச்பி ரயில்பெட்டிகளில் இதுபோன்று பொருத்த முடியாத காரணத்தால் இந்த ரயில் பெட்டிகளுக்கு மின்விசிறி, விளக்குகள் மற்றும் குளிர்வசதிக்கு மின்சக்தி வழங்க இரு முனைகளிலும் தனியாக டீசல் ஜெனரேட்டர் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயங்கி வந்தன.



ரயில்களில் அதிகபட்சம் 24 ரயில் பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட முடியும் என்பதால் முன்பதிவற்ற ரயில் பெட்டிகள் நீக்கப்பட்டு அந்த இடத்தில் இந்த ஜெனரேட்டர் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு வந்தன. இதனால் முன்பதி வற்ற பயணிகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் இடவசதி பெறுவதில் சிக்கல் இருந்தது.



இந்நிலையில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவை களைக் கருத்தில்கொண்டு இருக்கை வசதியுடன் கூடிய ஜெனரேட்டர் ரயில் பெட்டிகளை வடிவமைக்கும் பணியை ஐசிஎப் மேற்கொண்டது. மிகக் குறுகிய கால அவகாசமான 9 மாதங் களுக்குள் புதிய வடிவமைப் புடன் கூடிய இந்த ரயில் பெட் டியை ஐசிஎப் தயாரித்துள்ளது.




இந்த ரயில் பெட்டியில் டீசல் ஜெனரேட்டர் ரயில் பெட்டியின் கீழ்ப்பாகத்துக்கு மாற்றப்பட்டுள் ளது. இதனால் சுமார் 30 முன்பதிவற்ற ரயில் பயணிகளும் 6 மாற்றுத்திறனாளி பயணிகளுக் கும் கூடுதல் இடவசதி கிடைக் கும். இத்துடன் மாற்றுத்திற னாளிகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள கழிப் பறையும் இந்தப் பெட்டியில் அமைந்துள்ளது. சுமார் 3.7 கோடி ரூபாய் செலவில் இந்த ரயில் பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. 




பயணிகளின் கருத்தைக் கேட்ட றிந்து, இந்த ரயில் பெட்டிகளின் தரத்தை மேலும் மேம்படுத்த ஐசி எப் திட்டமிட்டுள்ளது’’ என்றனர்.டீசல் ஜெனரேட்டர் ரயில் பெட்டியின் கீழ்ப்பாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதால், சுமார் 30 முன்பதிவற்ற ரயில் பயணிகளும் 6 மாற்றுத்திறனாளி பயணிகளுக்கும் கூடுதல் இடவசதி கிடைக்கும்.

No comments:

Post a Comment

Please Comment