ரவாலட்டு
தேவையான ப்பொருட்கள். :
ரவை. : 2 கப்
பொடித்த சர்க்கரை. : 1+ 1/2 கப்
வறுத்த முந்திரி. : 100 கி (பொடியாக நறுக்கிய)
நெய். : 100 ml
ஏலக்காய் தூள். : தேவையான அளவு
செய்முறை. :
1. அடிகனமான வானலியை எடுத்து சிறுது நெய்யூற்றி சூடேற்றி ரவையை நிறம் மாறாமல் வறுக்கவும்.
2. குளிர்வித்து பொடித்துக் கொள்ளவும்.
3. பொடித்த ரவை ; பொடித்த சர்க்கரை ; ஏலக்காய் தூள்; வறுத்த முந்திரி அனைத்தையும் ஒரு பெரிய தட்டில் கொட்டி நன்றாக கலக்கவும்.
4. நெய்யை சிறிது சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக ரவை கலவையில் ஊற்றி சிறிய சிறிய உருண்டை யாக பிடிக்கவும்.

No comments:
Post a Comment
Please Comment