தமிழக அரசு உதவி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழக அரசு உதவி

பெற்றோரை இழந்ததால் படிப்பைக் கைவிட்ட மாணவிக்கு தமிழக அரசு உதவி



பெற்றோரை இழந்ததால் படிப்பைக் கைவிட்ட மாணவியின் படிப்பைத் தொடர தேவையான வசதிகளைச் செய்து தருமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.




ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை அடுத்துள்ள காளி திம்பம் மலைக்கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் - மாரம்மாள் தம்பதி யின் மகள் சிவரஞ்சனி (18), மகன் ஹரிபிரசாந்த் (14). மாரம்மாள் பல ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்ட நிலையில், சாமிநாதன் கூலி வேலைசெய்து இருவரையும் படிக்க வைத்தார்.





சிவரஞ்சனி பிளஸ் 2 முடித்ததும், கோவை அரசு கலைக்கல்லூரியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்த நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் சாமிநாதன் உடல்நலக்குறைவால் இறந்தார்.
இதனால் சிவரஞ்சனி படிப்பை தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. தனது தம்பியை தொடர்ந்து படிக்க வைக்கும் நோக்கில், 100 நாள் வேலைத்திட்டப் பணி மற்றும் கூலிவேலைக்கு சிவரஞ்சனி செல்லத் தொடங்கி னார். இதுகுறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்த செய்தியைப் பார்த்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பெற்றோரை இழந்து வாடும் இருவரது படிப்பு செலவை அரசே ஏற்கும் என அறிவித்தார்.இந்நிலையில் நேற்று சத்தியமங்கலத்திற்கு வந்த ஈரோடு ஆட்சியர் சி. கதிரவன், சிவரஞ்சனியை சந்தித்து தொடர்ந்து படிக்க அனைத்து உதவிகளை அரசு செய்யும் என உறுதியளித்தார்.




இதுகுறித்து ஆட்சியர் சி.கதிரவன் கூறும்போது, சிவ ரஞ்சனி சத்தியமங்கலம் அரசு கலைக்கல்லூரியில், பி.காம் பட்டப் படிப்பினைத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவி கல்லூரி விடுதியில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவிக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியத் தேவைகளும் நிறை வேற்றப்படும், என்றார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் தேவை யான மளிகை சாமான்கள் மற்றும் உடைகள் வழங்கப்பட்டன. ஈரோடு டிஆர்ஓ எஸ்.கவிதா, தாளவாடி வட்டாட்சியர் கதிர்வேல், சத்திய மங்கலம் வட்டாட்சியர் கார்த்திக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.





மாணவி சிவரஞ்சனி கூறும்போது, சி.ஏ. படித்து ஆடிட்டராக விரும்பு கிறேன். தமிழக முதல்வர்,ஆட்சியர் உள்ளிட்ட அரசு தரப்பினர் தவிர, தனி யார் அமைப்புகள், தனிநபர்கள் பலர் உதவி செய்துள்ளனர், என்றார்.

No comments:

Post a Comment

Please Comment