மின்வாரியம், போக்குவரத்துக் கழகம் மற்றும் லாபத்தில் இயங் கும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள், தீபாவளியை சிறப்பாக கொண்டாட இந்த ஆண்டுக்கான போனஸ், கருணைத் தொகை வழங்கப்படும்.
திருத்தப்பட்ட போனஸ் சட்டப்படி, போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21 ஆயிரம். இதன்படி, போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர அடிப்படை சம்பள உச்சவரம்பு ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு அந்த நிறுவனங்கள் ஒதுக்கக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 சதவீத போனஸ், 11.67 சதவீத கருணைத் தொகை என 20 சதவீதம் வழங்கப்படும்.
நஷ்டம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 8.33 சதவீத குறைந்தபட்ச போனஸ், 1.67 சதவீத கருணைத் தொகை என 10 சதவீதம் வழங்கப்படும்.
தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தகுதியுடைய தொழிலாளர்களுக் கும், தமிழ்நாடு பாடநூல், கல்வி யியல் கழகத்தில் பணியாற்றும் ‘சி’, ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கும் 8.33 சதவீத போனஸ், 11.67 சதவீத கருணைத் தொகை என 20 சதவீதம் வழங்கப்படும்.
லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்களுக்கு போனஸ், கருணைத் தொகை 20 சதவீதம் வரையிலும், ஒதுக்கக்கூடிய உபரி தொகைக்கு ஏற்ப வழங்கப்படும். பிற கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்களுக்கு 8.33 சதவீத போனஸ், 1.67 சதவீத கருணைத் தொகை வழங்கப்படும்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்று வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றும் ‘சி’, டி’ பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீத போனஸ், 1.67 சதவீத கருணைத் தொகை வழங்கப்படும்.
அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம், தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் ஆகிய நிறுவனங்களின் ஊழியர்களுக்கு, ஒதுக்கக்கூடிய உபரி தொகையை கருத்தில் கொண்டு 20 சதவீதம் அல்லது 10 சதவீதம் போனஸ், கருணைத் தொகை வழங்கப்படும்.
ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் ‘சி’, டி’ பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதமும், ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டாத தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் ‘சி’, ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீதமும் போனஸ் வழங்கப்படும்.
இதுதவிர, மின்சார வாரியத் தில் பணியாற்றும் ஒப்பந்த தொழி லாளர்களுக்கு ரூ.4 ஆயிரம், நுகர் பொருள் வாணிபக் கழக தற்காலிக தொழிலாளர்கள், போனஸ் சட்டத் தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட கூட்டுறவு சங்க தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,400 கருணைத் தொகையாக வழங்கப்படும்.
இதனால், போனஸ் பெற தகுதி யுள்ள நிரந்தர தொழிலாளர்கள் ரூ.8,400 முதல் ரூ.16,800 வரை பெறுவார்கள். 3 லட்சத்து 58 ஆயிரத்து 330 தொழிலாளர்களுக்கு ரூ.486 கோடியே 92 லட்சம் போனஸாக வழங்கப்படும்.

No comments:
Post a Comment
Please Comment