ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி, ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற் படுத்தும் வகையில் ‘இந்து தமிழ்' நாளிதழுடன் இந்தியன் ஆயில் நிறுவனம் இணைந்து, கல்லூரி மாணவர்களுக்கு ‘ஜிங்கில்ஸ்' போட்டி, பேச்சுப் போட்டி ஆகியவற்றை நடத்து கிறது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இளநிலை, முதுநிலை மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்கலாம். பதிவுக் கட்டணம் இல்லை.
‘ஜிங்கில்ஸ்' இசைக்கும் போட் டிக்கு “ஊழலை ஒழித்து - புதிய இந்தியாவை உண்டாக்கு” என்ற தலைப்பில் 90 நொடிகள் கால அளவில் ஜிங்கில்ஸை தமிழ் மொழியில் இசையுடன் பாடி, அதை ‘எம்பி3' வடிவில் குறுந் தகட்டில் பதிவு செய்து, அதன் மேல் உறையில் ‘Competition 2018' என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். எத்தனை ஜிங்கில்ஸை வேண்டுமானா லும் அனுப்பலாம். கல்லூரி முதல்வர், துறை தலைவரின் அனுமதியுடன் இவற்றை அனுப்ப வேண்டும்.
பேச்சுப் போட்டியில் ஒரு கல்வி நிறுவனத்திலிருந்து அதிக பட்சமாக 10 பேர் பங்கேற்கலாம். போட்டியாளர்கள் போட்டி நடை பெறும்போது மேற்கண்ட தலைப் பில் 5 முதல் 7 நிமிடங்கள் பேச வேண்டும்.
பங்கேற்பாளர்களின் பெயர் பட்டியல் அவர்களின் தொலை பேசி எண், இமெயில் முகவரி ஆகிய விவரங்களுடன் கல்லூரி முதல்வர், துறைத் தலைவர் அனுமதியுடன் அனுப் பப்பட வேண்டும்.
நாளை கடைசி
ஜிங்கில்ஸ், பேச்சாளர் பட்டியல் ஆகியவற்றை அனுப்ப வேண்டிய முகவரி: சர்குலேஷன் பிரிவு, தி இந்து குழுமம், கேஎஸ்எல் மீடியா லிமிடெட் (கஸ்தூரி அண்டு சன்ஸ் லிட். துணை நிறுவனம்), 124 வாலாஜா சாலை, சென்னை 600002. evigilmktgsr@gmail.com என்ற இமெயில் முகவரிக்கும் அனுப்பலாம். மேலும் விவரங் களுக்கு 9566180709 என்ற எண்ணில் தொடர்புகொள்ள லாம். இவற்றை நாளை (அக்.25) மாலை 6 மணிக் குள் அனுப்ப வேண்டும்.
போட்டி நடைபெறும் தேதி, வெற்றியாளர்கள் குறித்த விவரம், பரிசளிப்பு விழா போன்ற தகவல்கள் பதிவு செய்பவர்களின் இமெயில் முகவரி மற்றும் மொபைல் போன் மூலம் தெரிவிக்கப்படும்.
No comments:
Post a Comment
Please Comment