அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., தொடங்க அங்கன்வாடி மைய விபரம் சேகரிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., தொடங்க அங்கன்வாடி மைய விபரம் சேகரிப்பு

அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., தொடங்க, அங்கன்வாடி மைய விபரம் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 








தமிழகத்தில், அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில், ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கை சரிந்து வருகிறது. இதை ஈடுகட்ட அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்பு தொடங்க, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதல்கட்டமாக, அங்கன்வாடி மையங்களிலுள்ள குழந்தைகளை, அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்பில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப, மேல்நடவடிக்கைக்கு, மாவட்ட வாரியாக, விபரம் சேகரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, நடுநிலைப்பள்ளிகள் அருகிலுள்ள அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை, அதில் பயன்பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை, கட்டமைப்பு மற்றும் வசதிகள் உள்ளிட்டவை குறித்து, அக்., 30க்குள் விபரம் அனுப்ப, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment