'தோட்டக்கலை படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

'தோட்டக்கலை படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: 








தளி தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில், இரண்டாண்டு பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பங்கள் அளிக்கலாம். பிளஸ் 2வில், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வேளாண்மை கோட்பாடு மற்றும் செயல்முறை, பயிர் உற்பத்தி கோட்பாடு ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை படித்திருக்க வேண்டும். இதற்கு, விண்ணப்பிக்க பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், 25 வயதுக்குள்ளும், மற்ற பிரிவினர், 22 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை, 200 ரூபாய் செலுத்தி நேரில் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வரும், 31 மாலை, 5:45க்குள் வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை, 'துணை இயக்குனர், தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், கூட்டூர் கிராமம், நெல்லுமாறு சாலை, தளி-635118, கிருஷ்ணகிரி மாவட்டம், என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 84894 57185 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Please Comment