சென்னையில் உள்ள மீனவ இளைஞர்களுக்கு, குடிமைப்பணிகளுக்கான சிறப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்க, அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.சென்னை மாவட்ட ஆட்சியர், அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்தி குறிப்பு:
சென்னையில், பட்டபடிப்பு முடித்த மீனவ இளைஞர்களுக்கு, மீன்வளத்துறை மற்றும் அண்ணா மேலாண்மை பயிற்சி மையம் சார்பில், குடிமைப்பணிகளுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.பயிற்சி பெற விரும்புவோர், மீன்வளத் துறையின் இணையதளமான, https://www.fisheries.tn.gov.in என்ற முகவரியில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 5ம் தேதிக்குள், மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், 77, சூரிய நாராயண தெரு, ராயபுரம். என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. .

No comments:
Post a Comment
Please Comment