'வீடு கட்டுவதற்கு அனுமதி பெற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்' - ThulirKalvi Blogs

Latest

Search This Site

'வீடு கட்டுவதற்கு அனுமதி பெற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்'

வீடு கட்டுவதற்கு அனுமதி பெற, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை:




நீலகிரி மாவட்டத்தில் கட்டடம் கட்டுவதற்கான அனுமதி பெற, இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான, விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்ய www.nilgirisbuildingpermissions.org என்ற இணையதளம் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டது.தற்போது, பொதுமக்கள் வசதிக்காக, வீட்டுமனை கட்டடங்கள் கட்ட தேவையான விண்ணப்பங்களை, உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய இந்த இணையத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.




இணையத்தில் கேட்கப்படும் குறிப்புகளை பதிவேற்றம் செய்து, தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளுக்கு இணையம் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு, அனுப்பப்படும் விண்ணப்பத்துக்கு விண்ணப்ப குறியீட்டு எண் வழங்கப்படும்.மேலும், பதிவேற்றம் செய்த விண்ணப்ப அசலினை, தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு, பெறப்படும் விண்ணப்பம் புவியியல், வனத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை மூலமாக ஆய்வு மேற்கொள்ளப்படும்.ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் வீட்டு மனை கட்டடம் கட்ட, அனுமதி வழங்கப்படும். மேற்கண்ட இணையதள வசதியினை பொதுமக்கள் பயன்படுத்திப் பயனடை வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

No comments:

Post a Comment

Please Comment