இந்திய குடிமைப்பணி போட்டித் தேர்வு பயிற்சிக்கு மீனவ சமுதாய பட்டதாரிகள் 5-க்குள் விண்ணப்பிக்கலாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இந்திய குடிமைப்பணி போட்டித் தேர்வு பயிற்சிக்கு மீனவ சமுதாய பட்டதாரிகள் 5-க்குள் விண்ணப்பிக்கலாம்


மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணி போட்டித் தேர்வுக்கானப் பயிற்சியில் பங்கேற்க அக்.5- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:



மீன்வளத் துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டுதோறும் கடல் மற்றும் உள்நாட்டு மீனவக் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் வாரிசுகள், மீனவர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசுகள் மற்றும் மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து, தனிக்குழுவாக அமைத்து அவர்களுக்கு இந்திய குடிமைப் பணிக்கானப் போட்டித் தேர்வில் கலந்துகொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு கடந்த ஆண்டு ஆணை வழங்கியது. அதன்படி, இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பப் படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையின் இணையதளமான ஜ்ஜ்ஜ்.ச்ண்ள்ட்ங்ழ்ண்ங்ள்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் இருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்பப் படிவங்களை மண்டல மீன்துறை இணை இயக்குநர் மற்றும் மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாள்களில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். .




விண்ணப்பதாரர், இணைய தளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 05.10.2018 பிற்பகல் 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். .
மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு திருவாரூர் அல்லது நாகை மாவட்டத்தில் உள்ள மீன்துறை உதவி இயக்குநர் மற்றும் மீன்துறை இணை இயக்குநர் அலுவலகங்களை நேரில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார். .

No comments:

Post a Comment

Please Comment