பிறருக்கு உதவும் நற்பண்புகளை, மாணவர்களுக்கு வழங்கும் விதமாக, 'கொடுத்து வழங்கும் வாரம்'பள்ளிகளில் கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
காலாண்டு தேர்வுக்கு பிறகு, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளி திறந்த பின் ஒருவாரம், கொடுத்து மகிழும் வாரம் கடைபிடிக்குமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், 'ஜாய் ஆப் கிவிங் என்ற கொடுத்து மகிழும் வாரத்தை, ஆண்டுதோறும் கொண்டாடுவது வழக்கம். மாணவர்களால் முடிந்த பொருட்களை, முதியோர் இல்லங்கள், ஆதரவற்ற விடுதிகளுக்கு கொடுப்பர்.இதோடு, நன்னெறி வகுப்புகளும் நடத்தப்படும். இதன்மூலம், பிறருக்கு கொடுத்து உதவுவதன்முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர்வர்' என்றனர். .

No comments:
Post a Comment
Please Comment