புதுச்சேரி;நேரம் தவறாமையை கடைபிடித்தால், லட்சியங்களை அடைய முடியும் என, மாணவர்களுக்கு கவர்னர் கிரண்பேடி அறிவுரை கூறினார்.
காந்தியின் 150 வது பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி பல்கலைக்கழக பன்னாட்டு ஆய்வியல், அரசியல் துறை மற்றும் காந்திய ஆய்வியல் மையம் சார்பில், &'தற்போதைய சூழலில் காந்தியின் அகிம்சை நெறிகள்&' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் ஜெ.என். கருத்தரங்கக் கூடத்தில் நடந்தது. காந்தீய ஆய்வியல் மைய தலைவர் மூர்த்தி வரவேற்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கவர்னர் கிரண்பேடி பங்கேற்று, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். கருத்தரங்கை தொடங்கி வைத்ததுடன்,
சென்னையில் இயங்கி வரும் காந்தி அறநெறிக் கழக கிளையை புதுச்சேரியில் தொடங்கி வைத்து பேசியதாவது:மாணவர்கள் அடுத்தவரிடம் எதையும் எதிர்பார்க்காமல், தங்களுக்குத் தாங்களே உயர்த்திக் கொண்டு, நம்மைச் சுற்றியுள்ள சமூகத்திற்கு உதவ வேண்டும். துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல கோடி பணம் செலவு செய்து, இந்தியாவைத் துாய்மைப் படுத்தும் பணி நடைபெற்று வரும் சூழலில், மாணவர்கள் தங்களின் கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து, வீட்டையும், சுற்றுப் புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.நேரம் தவறாமை, எளிமை, நேர்மை, சுகாதார வாழ்வியல் முறை போன்ற காந்தி தன் வாழ்நாளில் பின்பற்றிய அனைத்து அறநெறிகளையும் பின்பற்றி நடந்தால், மாணவ சமூகம் முன்னேறும். வாழ்வியல் உன்னத நிலையை அடைய வேண்டுமெனில், காந்தியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான ஆவணப்படங்களை கட்டாயம் மாணவர்கள் பார்க்க வேண்டும. இவ்வாறு அவர் பேசினார்.கருத்தரங்கில் துணைவேந்தர் குர்மீத் சிங் பேசுகையில், &'&'உலகத்தின் எந்த நாடுகளுக்கு சென்றாலும், காந்தியை பற்றி அனைவருமே அறிந்துள்ளனர்.
அவரது அகிம்சை நெறிகள் குறித்து உலகெங்கிலும் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. வலிமையான அகிம்சை நெறிகளை மாணவர்கள், தங்கள் வாழ்வில் கடைபிடித்து உன்னதமான நிலைக்கு வர முயற்சிக்க வேண்டும்.காந்தியின் 150வது பிறந்த நாள் விழா, இந்தாண்டு முழுவதும் அவர் தொடர்பான நிகழ்ச்சிகள் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும்&'&' என்றார்.விழாவில், சென்னை காந்தி நினைவுக் கழக நிறுவனர் காந்தி கனகராஜ் கலந்து கொண்டு, காந்தியின் அகிம்சை நெறிகளிலுள்ள வலிமைக் குறித்து பேசினார். காந்தி குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. பதிவாளர் சசிகாந்த தாஸ், நிதி அதிகாரி பிரகாஷ், பி.ஆர்.ஓ., மகேஷ், புல முதன்மையர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
Please Comment