யூத் ஒலிம்பிக் போட்டி: தங்கம் வென்ற இந்திய வீராங்கனை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

யூத் ஒலிம்பிக் போட்டி: தங்கம் வென்ற இந்திய வீராங்கனை

யூத் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை மானு பாகெர் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றுள்ளார். 3-வது யூத் ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. 



இதில் 206 நாடுகளின் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 236.5 புள்ளிகள் குவித்து இந்தியாவிற்கு தங்கப்பதக்கத்தை பெற்றுத் தந்தார். அரியானாவை சேர்ந்த அரியானாவை சேர்ந்த மானு பாகெர் உலக கோப்பை போட்டி மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Please Comment