சென்னையில் ரசிக்க வைக்கும் ஓவியக் கண்காட்சி : மக்கள் ஆர்வத்துடன் பார்வை! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சென்னையில் ரசிக்க வைக்கும் ஓவியக் கண்காட்சி : மக்கள் ஆர்வத்துடன் பார்வை!






சென்னை, நுங்கம்பாக்கம் லலித் கலா அகாடமியில் பெண்ணின் கிராமியத்தை வெளிப்படுத்தும் ஓவியக் கண்காட்சி தொடங்கியுள்ளது. அதனை ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். அதே போல் திருநாவுக்கரசரின் ஓவியங்கள், பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் நேர்த்தியாக சுட்டிக்காட்டி உள்ளனர். நடனம் ஆடும் பெண்கள் நாட்டியத்தில் இல்லை, ஓடி திரியும் சேவல்கள் வீட்டில் இல்லை, துள்ளி திரியும் காளைகள் ஜல்லிக்கட்டில் இல்லை, இவை அனைத்தும் சென்னை நுங்கம்பாக்கம் லலித் கலா அகாடமியில் உள்ள ஓவிய கண்காட்சியில் தான். 




சிறு வயதில் தான் கண்ட காட்சிகளை ஓவியமாக வரைந்திருக்கிறார் கிருபானந்தம். ஓடி விளையாடிய வயல் வெளிகளையும் அதில் வந்த காட்சிகளையும் ஓவியமாக வரைந்திருக்கிறார் கிருபா. இருவது வருடங்களாக பெண்ணியத்தை ஓவியமாக வரைந்து வரக்கூடிய ஓவியர் திருநாவுக்கரசு. இந்த கண்காட்சியில் உள்ள ஓவியங்கள் சமீபகாலங்களாக பெண்களுக்கு நிகழ்ந்து வரும் பிரச்சனைகள் குறித்து, அவர்களின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஓவியங்கள் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். எந்த ஓவிய கண்காட்சி வரும் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தலை சிறந்த ஓவியர்கள், இளைஞர்கள் என பலரும் இந்த கண்காட்சியை பார்த்து வியந்து வருகிறார்கள். 

No comments:

Post a Comment

Please Comment