
சீனாவையும் ஹாங்காங்கையும் கடல் வழியாக இணைக்கும் வகையில் ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. அந்த பாலமானது உலகின் மிக நீளமான பாலம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் தோராயமாக 146,000 கோடி மதிப்பில் கட்டுப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் மூலம் சீனாவில் இருந்து ஹாங்காங்கிற்கு செல்லும் பயணநேரம் வெகுவாக குறைக்கப்படும். 68 மில்லியன் மக்களை இணைக்கஇந்த பாலமானது உதவுகிறது. இந்த ஒன்பது ஆண்டுகளாக கட்டப்பட்டு, இன்று இந்த பாலத்தை சீன அதிபர் ஷி ஜின்பிங் திறந்து வைத்தார்.
பாலத்தின் சிறப்புகள்:-
* இந்த பாலம் கட்ட 4 லட்சம் டன் எஃகு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 60 ஈஃபில் டவர் கட்ட தேய்குண எஃகு பயன்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பாக படிக்க இதோ சில வழிகள்
* இந்த பாலத்தின் மொத்த நீளம் 55 கி.மீ. அ தில் 30 கி.மீ பாலம் கடலுக்கு மேலே உள்ளது.
* நிலநடுக்கம், சூறாவளி ஆகிய சூழலிலும் தாக்குப்பிடிக்கும் வகையில் இந்தப் பாலம் வடிவமைகப்பட்டிரு
க்கிறது.
* ஒரு நாளைக்கு 9200 வாகனம் இந்த பாலத்தில் பயணிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த பாலத்தில் செல்ல சில சிறப்பு அனுமதிகளை வாங்க வேண்டும்.
* இந்த பால கட்டுமானத்தின் போது நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்தனர். 18 பேர் மரணம் அடைந்தனர்.
* ஆண்டுக்கு 86 மில்லியன் டாலர்கள் சுங்கத்தின் மூலம் வருவாய் ஈட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment