பொழுதுபோக்கு தகவலை பார்க்க நாள் ஒன்றுக்கு ஒருமணி நேரம் செலவிடும் இந்தியர்கள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பொழுதுபோக்கு தகவலை பார்க்க நாள் ஒன்றுக்கு ஒருமணி நேரம் செலவிடும் இந்தியர்கள்

இந்திய ஸ்மார்ட்போன் பயனாளர்கள் தினமும் சராசரியாக 1.1 மணி நேரம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்வையிட்டு வருவதாக சீட்டா லேப் மற்றும் யூசி மீடியா லேப் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.













சீட்டா டேட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகியவை கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நடத்தப்பட்ட ஆய்வில், அமேசான் பிரைம் வீடியோவை பயன்படுத்தப்பவர்கள் மூன்று மடங்கும், நெட்பிளிக்ஸ் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 6.8 மடங்கும் அதிகரித்து உள்ளது.








யூசி மீடியா லேப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் ஸ்மார்ட்போனில் அதிகளவில் பார்க்கப்படும் தகவல்கள் பொழுதுபோக்கு பிரிவை சேர்ந்தவையாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது. மொத்த இந்திய பயனாளர்களில் 27.4 சதவிகிதம் பேர் பொழுதுபோக்கு தகவல்களையும், ஸ்போர்ட்ஸ் மற்றும் லைப்ஸ்டைல் தகவல்களை முறையே 18.6 சதவிகிதம் பேரும், 13.6 சதவிகிதம் பேரும் பார்த்து வருவதாக தெரிய வந்துள்ளது.
இதில் வீடியோக்களை 11 சதவிகிதம் பேரும், பொழுது போக்கு தகவல்களை 80.6 சதவிகிதம் பேரும் பார்ப்பதாக தெரிய வந்துள்ளது. பொழுது போக்கு தகவல்களை பார்க்கும் பயனாளர்கள் பெரும்பாலானவர்கள் 30 வயதுக்குட்பட்டவர்களே என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த அறிக்கையில் சமூக இணைய தளங்களை விட வீடியோ ஆப்கள் பிரபலமாக உள்ளதாகவும், இந்த ஆப்கள் சமூக இணையதளங்களுடன் ஒப்பிடும் போது 1.2 மடங்கு அதிகமாக பரவியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.








இந்தியாவில், ஆண்கள், பெண்கள் என்ற வகையில் நடத்தப்பட ஆய்வில், ஆண்களே அதிகளவில் இன்டர்நெட் பயன்படுத்தி வருகின்றனர். மொத்தமாக 67.89 சதவிகித ஆண்கள் இன்டர்நெட் பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது.








இதுமட்டுமின்றி பலர் நாள் ஒன்றுக்கு ஒருமணி நேரத்திற்கும் மேலான யூடியுப்பை பயன்படுத்தி வருவதாகவும், ஹாட்ஸ்டார்-ஐ 55 நிமிடங்களும் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.






மொழிகளை பொறுத்தவரை ஹிந்தி முக்கிய மொழியாக இருந்து வருகிறது. ஹிந்தி தகவல்களை 69.02 சதவிகிதம் பேரும், ஆங்கில தகவல்களை 6.37 சதவிகிதம் பேரும் பயன்படுத்தி வருகின்றனர். எஞ்சியுள்ள 24.61 சதவிகித இன்டர்நெட் பயனாளர்கள் மற்ற பல மொழிகளை விரும்பி பார்த்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Please Comment