வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலை யில், தமிழ்நாடு மின்வாரியம் பல் வேறு பாதுகாப்பு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுவாக, மழைக் காலத்தின் போது முறை யாக பராமரிக்கப்படாத மின்சாத னங்களால் மின்விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால், உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்படு கிறது.
குறிப்பாக, மழைக் காலத்தில் மின்சார ஒயர்கள் மீது துணிகளை காய வைக்கக் கூடாது. மின்கம் பங்களில் கால்நடைகளை கட்டக் கூடாது. வீட்டில் பழுதடைந்த மின் சாதனங்களை மாற்ற வேண்டும். இடி, மின்னல் ஏற்படும் போது வெட்டவெளியில் நிற்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் குறித்து மின்வாரியம் பொதுமக்க ளிடையே விழிப்புணர்வை ஏற் படுத்தி வருகிறது.
இதுகுறித்து, மின்வாரிய அதி காரி ஒருவர் கூறியதாவது:
‘‘தொழில்நுட்பப் புரட்சி காரணமாக, மக்கள் அனைவரும் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். ‘வாட்ஸ்-அப்’ செயலி மூலம் பொதுமக்களிடையே விழிப் புணர்வு பிரச்சாரத்தை மேற் கொண்டு வருவது வரவேற்பை பெற்றிருக்கிறது’’ என்றார்.

No comments:
Post a Comment
Please Comment