ஆங்கில பாடப் புத்தகத்தில் பெரம்பலூர் அரசுப் பள்ளி மாணவி
தமிழக அரசின் 6 ஆம் வகுப்பு, 2 ஆம் பருவ ஆங்கில பாடப் புத்தக்கத்தில், தேசிய டேக்வாண்டோ போட்டியில் வெற்றிபெற்ற பெரம்பலூர் அரசுப் பள்ளி மாணவியின் சாதனை குறித்த விவரங்கள் படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், உசிலம்பட்டி அருகேள்ள மேலதிருமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா- சந்தனம் தம்பதியின் மகள் ராஜமாணிக்கம் (17). மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர், டி.ராமநாதபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும்போது தடகளம், கால்பந்து மற்றும் டேக்வாண்டோ ஆகிய போட்டிகளில் பங்கேற்றார்.
போதிய பயிற்சி வேண்டி, 10 ஆம் வகுப்பு முடித்த பின்னர், பெரம்பலூரில் உள்ள அரசு மகளிர் விளையாட்டு விடுதியில் தங்கி பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்.
No comments:
Post a Comment
Please Comment