ISI - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ISI

இன்று உலக தர நிர்ணய தினம்: ஐஎஸ்ஐ சான்று, ஹால்மார்க் முத்திரையின் அவசியம் என்ன? - இந்திய தர நிர்ணய அதிகாரி விளக்கம்



ஒவ்வொரு பொருளுக்கும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரே சீரான தரம் அவசியம். இதனைக் கருத்தில் கொண்டு சர்வதேச தர நிர்ணய அமைப்பு (ஐஎஸ்ஓ) நிறுவப்பட்டது. தற்போது 162 உறுப்பு நாடுகளுடன் இந்த அமைப்பு செயல்படுகிறது. இதில், இந்தியாவும் உறுப்பு நாடாக உள் ளது. இந்தியாவின் பிரதிநிதியாக இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) செயல்பட்டு வருகிறது.


உலக அளவில் தரம் குறித்த விழிப் புணர்வை அதிகரிக்க ஆண்டுதோறும் அக்டோபர் 14-ம்தேதி ஐஎஸ்ஓ-வின் உறுப்பு நாடுகள் உலக தர நிர்ணய தினத்தை கொண்டாடி வருகின்றன.


இந்தியாவில் அந்தப் பணிகளை பிஐஎஸ் செய்து வருகிறது. இந்தியாவிலுள்ள பொருட்களைத் தர நிர்ணயம் செய்து பிஐஎஸ் சான்றிதழ் வழங்கி வருகிறது.
அதில் முக்கியமானவை ஐஎஸ்ஐ சான்று, ஹால்மார்க் முத்திரை.


மக்கள் தரம் குறைவான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வாங்கி ஏமாறாமல் இருக்க 'ஹால்மார்க்' முத்திரை திட்டத்தை பிஐஎஸ் செயல்படுத்தி வருகிறது. இதற்காக, பிஐஎஸ்-ஆல் அங்கீகரிக்கப்பட்ட 'ஹால்மார்க்' மையங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. மக்கள் அதிகம் பயன்படுத்தும் 22 காரட் தங்கத்துக்கு 916 முத்திரை அளிக்கப்படுகிறது. ஹால்மார்க் முத்திரையுள்ள நகையில், பிஐஎஸ் லோகோ, தங்கத்தின் துல்லிய மதிப்புக்கான குறியீடு, தூய்மையைக் கண்டறியும் நிறுவனத்தின் குறியீடு, நகை வியாபாரியின் குறியீடு, ஆண்டு பற்றிய குறியீடு ஆகிய 5 அம்சங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.



பொருட்களின் தரத்தை உறுதி செய்ய இந்திய தர நிர்ணய அமைவனத் தால் (பிஐஎஸ்) முறையான பரிசோதனை களுக்குப் பிறகு ஐஎஸ்ஐ தரச் சான்று அளிக்கப்படுகிறது. பாதுகாப்பு, அதிகபட்ச நுகர்வு, உடல்நலன் சார்ந்த பொருட்களான எல்பிஜி சிலிண்டர்கள், கேன்களில் அடைக் கப்பட்ட குடிநீர், பால் பவுடர், சிமென்ட் உள்ளிட்ட 133 பொருட்களுக்கு ஐஎஸ்ஐ சான்று பெறுவது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. 


ஐஎஸ்ஐ சான்று பெற்ற பொருளின் உண்மைத்தன்மையை கண்டறிவது குறித்து இந்திய தர நிர்ணய அமைவன விஞ்ஞானி மீனாட்சி கூறியதாவது: ஐஎஸ்ஐ முத்திரை உள்ள பொருள்களில், ஐஎஸ்ஐ முத்திரைக்கு கீழ் CML-XXXXXXX என்ற 7 அல்லது 10 இலக்க லைசென்ஸ் எண் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த எண்ணைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட நிறுவனம் முறையான உரிமம் பெற்றுள் ளதா என்பதை மக்களே நேரடியாக அறிந்துகொள்ள முடியும். அதன்படி, www.manakonline.in/MANAK/ApplicationLicenceRelatedrpt என்ற இணையதளத்தில் Status of licences என்பதை கிளிக் செய்து லைசென்ஸ் எண் அல்லது நிறுவன பெயரை பதிவிட்டால், அந்தநிறுவனத்தின் முழு முகவரி, உரிமம் காலாவதியாகும் தேதி, செயல்பாட்டில் உள்ளதா என்பது உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஐஎஸ்ஐ சான்று பெற்ற, ஹால் மார்க் முத்திரையிட்ட பொருட்களில் ஏதேனும் குறை பாடுகள் இருந்தால் 0422-2210141, 2249016 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு நுகர்வோர் புகார் அளிக்க லாம் அல்லது புகார் குறித்த விவரங் களை ctbo@bis.gov.in என்ற மின்னஞ் சல் முகவரிக்கு அனுப்பலாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Please Comment