4 செ.மீ. நிமிர்த்தப்பட்ட பைசா நகர் சாய்ந்த கோபுரம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

4 செ.மீ. நிமிர்த்தப்பட்ட பைசா நகர் சாய்ந்த கோபுரம்

இத்தாலி நாட்டில் உள்ள பைசா நகரத்தில் உள்ள சாய்ந்த கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது.இந்த கோபுரம் கட்டுமான பணி கி.பி. 1173-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1372-ம் ஆண்டு முடிக்கப்பட்டது.



186 அடி உயரத்தில் 7 மாடிகளுடன் இதை கட்டி இருந்தனர்.கட்டுமான பணிகள் முடிந்ததில் இருந்தே கோபுரம் சிறிது சிறிதாக சாயத் தொடங்கியது. ஆனாலும் அது கீழே விழவில்லை. இதனால் பெரும் அதிசயமாக கருதப்பட்டது.அது விழுந்து விடாமல் தடுக்க பல்வேறு முயற்சிகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வந்தன. 1990-ம் ஆண்டு வாக்கில் இது சாய்வது மேலும் அதிகரித்தது. இதனால் எந்த நேரத்திலும் கோபுரம் விழுந்து விடும் என்று பயம் ஏற்பட்டது.



இதற்காக தனி பாதுகாப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. என்ஜினீயர் மைக்கேல் ஜமியோ கோவஸ்கி தலைமையிலான இந்த குழுவினர் தொடர்ந்து கோபுரத்தை நிமிர்த்தும் பணிகளை செய்து வந்தனர். அதன் மூலம் 14 செ.மீட்டர் அளவுக்கு கோபுரம் நிமிர்த்தப்பட்டு இருந்தது.இதனால் கோபுரம் இன்னும் வலுவாகி இருக்கிறது.

No comments:

Post a Comment

Please Comment