நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயமில்லை: தேசிய தேர்வு முகமை தகவல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயமில்லை: தேசிய தேர்வு முகமை தகவல்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க ஆதார் அட்டையை ஒரு சான்றாக இணைக்க வேண்டியதில்லை என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 












நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 30ம் தேதி கடைசி நாள். விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்புவோர் ஜனவரி 14ம் தேதி முதல் 31ம் தேதி வரை திருத்தம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் ஏப்ரல் 15ம் தேதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே 5ம் தேதி நீட் தேர்வு நடக்கிறது. இந்த ஆண்டு, விண்ணப்பங்கள் பதிவு செய்வதில் இருந்து எதற்காகவும் ஆதார் அட்டை இணைக்க வேண்டியதில்லை. அதற்கு பதிலாக வேறு அடையாள சான்றுகளை இணைக்கலாம்.மருத்துவ படிப்பு இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கும் திட்டத்தில் இந்த ஆணடு ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்கள் இணைந்துள்ளன. நீட் தேர்வு எழுத கடந்த ஆண்டு வரை 3 வாய்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அந்த வரையறை நீக்கப்பட்டு, மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கான வயது வரை நீட் எழுதலாம். நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் அனைத்து மொழிகளும் அடங்கிய ஒரே புத்தகமாக இந்த ஆண்டு வழங்கப்படும். அதில் இந்தி, ஆங்கிலம், குஜராத்தி, மராத்தி, ஒரியா, பெங்காலி, அஸ்ஸாமி, தெலுங்கு, தமிழ், உருது, கன்னடம் ஆகிய மொழிகளில் கேள்விகள் இடம் பெற்று இருக்கும். ஆங்கிலம் பொது மொழியாக இருக்கும். தேசிய தேர்வு முகமை இந்த ஆண்டு போட்டித் தேர்வுகளை நடத்த உள்ளதால் நாடு முழுவதும் 3 ஆயிரம் பயிற்சி மையங்களை இந்த முகமை அமைத்துள்ளது. இவை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் செயல்பட தொடங்கியுள்ளன. வரும் 2019 மே மாதம் முதல் நீட் தேர்வுக்காக பாடங்களை நடத்தும் மையங்களை தொடங்கி இலவசமாக பாடங்கள் நடத்த உள்ளது. 


No comments:

Post a Comment

Please Comment