அரசு மருத்துவமனைகளில் தனி சுகாதார ஆய்வாளர்கள் : பிறப்பு,இறப்பு சான்று வழங்குவதற்காக நியமனம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அரசு மருத்துவமனைகளில் தனி சுகாதார ஆய்வாளர்கள் : பிறப்பு,இறப்பு சான்று வழங்குவதற்காக நியமனம்


பிறப்பு, இறப்பு சான்று வழங்க அரசு மருத்துவமனைகளில் சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.








அரசு, தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'டிச்ஜார்ஜ்' நாளிலே பிறப்பு சான்று வழங்க கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக அரசு மருத்துவமனைகளில் தனி அறை ஒதுக்கப்பட்டது. இங்கு கம்ப்யூட்டர், இன்டர்நெட் வசதி செய்யப்பட்டது. ஆனால் சான்று வழங்கும் மாநகராட்சி, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மருத்துவமனைக்கு தினமும் வருவது இல்லை. சான்று பெறுவதில் அலைக்கழிப்பு தொடர்ந்தது. மாநகராட்சி, நகராட்சி அலுவலகம் சென்றும் அங்கும் அலைக்கழிக்கப்பட்டனர்.இதை தவிர்க்க சுகாதாரத்துறை தற்போது புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது. கர்ப்பிணிகள் ஆர்.சி.எச்., எனும் ( ரீ புரடெக்டிவ் சைல்டு ெஹல்த்) திட்டத்தில் சேர்க்கப்பட்டு,12 இலக்க எண்ணும் வழங்கப்படுகிறது. ஆர்.சி.எச்., திட்டத்தால் ஒவ்வொரு மாதமும் கர்ப்பிணியின் தேர்ச்சி அறிக்கை கண்காணிக்கப்படுகிறது. பிரசவம் ஆனவுடன் அதன் விபரம் ஆர்.சி.எஸ். திட்டத்தில் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.







சான்றுக்காக 'பிக்மி' சாப்டுவேர், வருவாய்துறை, உள்ளாட்சி சி.ஆர்.எஸ்.சாப்டுவேருடன் இணைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் உள்ள பிரசவம் விபரம் பிக்மி சாப்டூவேரில் பதிவு செய்வதால் உடனே பிறப்பு சான்றிதழ் 'பிரின்ட் அவுட்' எடுக்க வசதி உள்ளது. எளிமையாக வழங்கும் இச்சான்றிதழை மருத்துவமனை மூலம் வழங்க, இதற்கென தனி சுகாதார ஆய்வாளர்களையும் அரசு நியமித்து வருகின்றன.

No comments:

Post a Comment

Please Comment