புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், பன்னாட்டு மாநாட்டின் நிறைவு விழா நடந்தது.புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேசவியல் துறை, 13 பல்கலைக் கழகத்துடன் இணைந்து, 'பன்னாட்டுப் பார்வையில் உலகப் பொதுமை' என்ற தலைப்பிலான மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் துவங்கிய மாநாட்டை, துணைவேந்தர் குர்மீத் சிங் துவக்கி வைத்தார்.மூன்று நாட்கள் நடந்த மாநாட்டில் வியட்நாம், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இந்தியாவில் இருந்து கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் 40க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. மாநாட்டின் நிறைவு விழா நேற்று முன்தினம் நடந்தது. ரைய்ச்சூர் பல்கலைக்கழக சிறப்பு அலுவலர் பேராசிரியர் முசாபர் ஆசாதி சிறப்பு விருந்தினராக நிறைவுரையாற்றினார். புதுச்சேரி பல்கலைக்கழக கல்வி, ஆய்வியல் மற்றும் கிராமிய புனரமைப்பு இயக்கக இயக்குனர் பேராசிரியர் பாலகிருஷ்ணன், வாழ்த்திப் பேசினார். புல முதன்மையர் பேராசிரியர் வெங்கட்ட ரகோத்தம், கருத்துரை வழங்கினார். அரசியல் மற்றும் சர்வதேசவியல் துறையின் தலைவர் பேராசிரியர் மோகனன் பாஸ்கரன் பிள்ளை நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
Please Comment